Press "Enter" to skip to content

கேப்டன் பதவியில் கங்குலி – எம்எஸ் டோனிக்கும் இடையிலான ஒற்றுமை: ஜாகீர்கான் விவரிக்கிறார்

இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர்கான் கேப்டன் பதவியில் கங்குலி – டோனிக்கும் இடையிலான ஒற்றுமை குறித்து விவரித்துள்ளார்.

இந்திய அணியின் தலைசிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஜாகீர்கான். 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியவர். அதேபோல் 2011-ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற அணியிலும் இடம் பிடித்தவர்.

2000-த்தில் இருந்து 2014 வரை சுமார் 14 வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடிய அவர் டெஸ்ட் (92) போட்டியில் 311 விக்கெட்டுகளும், ஒருநாள் கிரிக்கெட் (200) போட்டியில் 282 விக்கெட்டுகளும், 17 டி20 போட்டியில் 17 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

இந்த காலக்கட்டத்தில் ஜாகீர்கான் கங்குலி தலைமையிலும், எம்எஸ் டோனி தலைமையிலும் விளையாடியுள்ளார். அணிக்கு அறிமுகம் ஆன போது கங்குலி கேப்டனாக இருந்தார். ஓய்வு பெறும் காலத்தில் எம்எஸ் டோனி கேப்டனாக இருந்தார்.

இருவருக்கும் இடையிலான ஒற்றுமை குறித்து ஜாகீர்கான் கூறுகையில் ‘‘நான் கங்குலி கேப்டனாக இருக்கும்போது அணியில் அறிமுகம் ஆனேன். சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆகும்போது அனைத்து வகையிலும் ஆதரவு தேவை. அப்போதுதான் கிரிக்கெட் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த முடியும். தொடக்க கால ஆதரவு மிகமிக முக்கியம். எனக்கு அது கிடைத்தது.

இரண்டு பேரும் இந்திய அணியை நீண்ட காலம் வழிநடத்தினர். டோனி காலத்தில் மாற்றம் அதிகமான நடந்ததை பார்க்க முடிந்தது.

எம்எஸ் டோனி கேப்டன் பதவியை ஏற்கும்போது அணியில் சர்வதேச போட்டிகளில் அதிக அளவில் விளையாடிய அனுபவ வீரர்கள் இருந்தனர். அதனால் அவர் நினைக்கும் வேகத்திற்கு அவர்களை கொண்டு செல்ல முடியவில்லை. ஆனால் பெரும்பாலான வீரர்கள் ஓய்வை நோக்கி நகரும் வேலையில், ஏராளமான இளம் வீரர்கள் அணிகளுக்குள் நுழைந்தனர். அப்போது கங்குலி என்ன செய்தாரோ, அதை எம்எஸ் டோனியும் செய்தார்.

கங்குலி ஆதராவால் சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் சில மேட்ச் வின்னராக திகழ்ந்தனர். டோனி வழிக்காட்டுதலில் விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் போன்ற வீரர்கள் சிறந்த வீரர்களாக உருவாகினர்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »