Press "Enter" to skip to content

மீண்டும் திரும்புவேன், இதில் சந்தேகப்பட ஒன்றுமில்லை: தினேஷ் கார்த்திக்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக், டி20 போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அறிமுகம் ஆனவர் தினேஷ் கார்த்திக். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதாலும், எம்எஸ் டோனி அணியில் காலடி எடுத்து வைத்ததாலும் இந்திய அணியில் நீண்ட காலமாக இடம் பிடிக்க முடியாமல் தவறினார்.

கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் பேட்ஸ்மேன் வரிசையில் இடம் கிடைத்தது. இலங்கையில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரின்போது கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்ததால் உறுதியாக காலூன்றினார்.

ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதன்பின் அணியில் இடம் கிடைக்கவில்லை.

ஒருநாள் போட்டியில் இருந்து தூக்குவதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் டி20 போட்டியில் இருந்து தூக்குவதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள முடியவில் என்று கூறும் தினேஷ் கார்த்திக், மீண்டும் அணிக்கு திரும்புவேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட்டில் எனது ரெக்கார்டு சிறப்பாக உள்ளது. உலக கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் தற்போது கூட டி20 அணிக்கு என்னால் திரும்ப முடியும் என்று நம்புகிறேன்.

சமீபத்தில் நான் ஆடிய உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகவே விளையாடியுள்ளேன். மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப மாட்டேன் என்று சந்தேகப்படுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »