Press "Enter" to skip to content

இவரது ஆதரவு இல்லை என்றால் அக்தர் கேரியர் 2000-த்திலேயே முடிந்திருக்கும்: பாகிஸ்தான் முன்னாள் தலைவர் சொல்கிறார்

பாகிஸ்தானின் அதிவேக வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தரின் கிரிக்கெட் கேரியர் 2000-த்திலேயே முடிந்திருக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் அதிவேக பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் (வயது 44). ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்பட்ட அக்தர், 100 மைல் வேகத்தில் பந்து வீசி உலக சாதனைப் படைத்தார். 2006-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன சோயிப் அக்தர் 2007-வரை விளையாடினார்.

2000-த்தில் இவரது பந்து வீச்சை எதிர்கொள்ள சர்வதேச பேட்ஸ்மேன்கள் பயந்தனர். இந்த காலக்கட்டத்தில் அவரது பந்து வீச்சு குறித்து சர்ச்சை எழுந்தது. ஐசிசி விதிமுறைக்கு மாறாக பந்து வீசுகிறார் என்பதுதான் அது.

அந்த நேரத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஜக்மோகன் டால்மியா ஐசிசி தலைவராக இருந்தார். இவரின் ஆதரவு இருந்ததால்தான் அக்தர் தொடர்ந்து பந்து வீச அனுமதிக்கப்பட்டார். அவர் இல்லை என்றால் 2000-2001-க்கு முன்பே அக்தரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும் என பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் தவ்கிர் ஜியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தவ்கிர் ஜியா கூறுகையில் ‘‘சோயிப் அக்தரின் பந்து வீச்சு ஆக்சன் குறித்த விவகாரத்தில் ஐசிசி-யின் தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். ஐசிசி-யின் உறுப்பினர்கள் அக்தரின் பந்து வீச்சு முறைகேடானது என்று கூறியபோது, எங்களுக்கு ஆதரவான முடிவை டால்மியா எடுத்தார்.

அக்தர் பிறந்ததில் இருந்தே வலது கையில் சற்று குறைபாடு இருக்கிறது. இதனால் ஐசிசி விதிமுறைக்கு (15 டிகிரிக்கு மேல் கையை வலைக்கக்கூடாது) சற்று கூடுதலாக பந்து வீச்சு ஆக்சனில் அனுமதி அளிக்கலாம் என நானும், டால்மியாவும் ஒரே நிலையில் இருந்ததால் ஐசிசி அவரை பந்து வீச அனுமதிக்கும் முடிவை எடுத்தது’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »