Press "Enter" to skip to content

எவ்வளவு நாள் சம்பளம் கொடுக்க முடியும் என்று தெரியவில்லை: மனோஜ் பிரபாகர் கவலை

தன்னிடம் வேலை செய்யும் நபர்களுக்கு எவ்வளவு நாட்கள் சம்பளம் கொடுக்க முடியும் என்று உறுதியாகத் தெரியவில்லை என மனோஜ் பிரபாகர் தனத கவலையை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் விளையாட்டுகள், தொழில்கள், பொருளாதாரம் என ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளன.

சிறுகுறு தொழில்கள் நடத்துபவர்கள் தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சில தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திலேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மனோஜ் பிரபாகர் அழகு பொருட்கள் தயாரிப்பது தொடர்பான தொழில் செய்து வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் தொழில் பாதித்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘என்னுடைய தொழிற்சாலை ஊழியர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது எனக்குத் தெரியும். தொழிற்சாலையின் அருகில்தான் நான் வசித்து வருகிறேன். இதனால் என்னால் அவர்களுக்கு எவ்வளவு செய்ய முடியுமோ அதை செய்து வருகிறேன். சம்பளம், சாப்பாடு உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறேன். எவ்வளவு நாள் இதை சரியாக செய்ய முடியும் என்பதை உறுதியாக கூற முடியவில்லை’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »