Press "Enter" to skip to content

குடும்ப வன்முறை வேண்டாமே…. மனைவியுடன் ‘பாக்சிங்’ செய்யும் காணொளியை வெளியிட்டு தவான் வேண்டுகோள்

ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நேரத்தில் குடும்ப வன்முறை பிரச்சனை தொடர்பான செய்திகளை கேட்பதற்கு கவலையாக இருக்கிறது என தவான் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கணவன், மனைவி, குழந்தைகள் என அனைவரும் 24 மணி நேரமும் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர். இதனால் குடும்பத்தலைவிக்கான வேலை அதிகரிக்கிறது. மேலும் குடும்பத் தலைவர் அவர்களுக்கு உதவி செய்ய முன்வராத போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்படுகிறது.

இப்படி ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அரசும் உதவி நம்பரை அறிவித்து தேவைப்பட்டால் உதவிக்கு அழைக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன தவான், இப்படிப்பட்ட செய்திகளை கேட்பது கவலையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் மனைவி ஆயிஷா மற்றும் அவரது குழந்தைகளுடன் குத்துச்சண்டை பயிற்சி எடுப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு ‘‘நான் என்னுடைய குடும்பத்துடன் வீட்டில் சந்தோசமாக நேரத்தை கழித்துக் கொண்டிருக்கும்போது குடும்ப வன்முறை இன்று வரை நடந்து வருகிறது என்பதை கேட்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது. நாம் அதை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அவசியம். அன்பான ஜோடியை தேர்வு செய்க… குடும்ப வன்முறைக்கு நோ.. சொல்க..’’ என்று பதிவிட்டுள்ளார்.

While I enjoy my time at home with my loving family, I am truly disheartened and sad to hear about domestic violence still existing in today’s time & we need to put an end to it. Choose a kind and loving partnership and say no to violence. 🙏 pic.twitter.com/ulh1zb0zmY

— Shikhar Dhawan (@SDhawan25)

April 27, 2020

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »