Press "Enter" to skip to content

அந்த ஒருமுறைதான் சச்சின் கண்ணீர் விட்டு அழுதார்: நினைவு கூர்ந்தார் கங்குலி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்ததை தாங்க முடியாத சச்சின் தெண்டுல்கர் வீரர்கள் அறையில் கண்ணீர் விட்டு அழுதார் என கங்குலி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படுபவர் சவுரவ் கங்குலி. சச்சின் – கங்குலி ஜோடி கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளது. கிரிக்கெட்டில் சிறந்த ஜோடியை கணக்கிட்டால் சச்சின் – கங்குலி ஜோடியை புறந்தள்ளி விட முடியாது.

சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனாக பெரும்பாலான சாதனைகளை படைத்துவிட்டார். ஆனால் கேப்டன் பதவியில் மிகப்பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை. இதனால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

சச்சின் கேப்டனாக இருந்தபோது சவுரங் கங்குலி இந்திய அணியின் புதுமுகம். 1996-97-ல் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகளில் கொண்ட டெஸ்டில் தொடரில் விளையாடியது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்தன. 3-வது டெஸ்டில் இந்தியாவுக்கு 120 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எப்படியாவது சேஸிங் செய்து 1990-களில் வெளிநாட்டில் தொடரை வென்ற அணி என்ற பெருமையை பெற்றுவிடலாம் என நினைத்தார். ஆனால் இந்தியா 81 ரன்னில் சுருண்டது.

அதன்பின் நடைபெற்ற இரண்டு போட்டிகளும் டிராவில் முடிந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 1-0 எனத் தொடரை கைப்பற்றியது.

போட்டியில் தோல்வியடைந்ததை தாங்க முடியாமல் சச்சின் தெண்டுல்கர் வீரர்கள் அறையில் கண்ணீர் விட்டு அழுதார். இந்த ஒரு முறைதான் அவர் அழுதார் என்று கங்குலி நினைவு கூர்ந்துள்ளார்.

போட்டியின்போது ‘‘தெண்டுல்கர் என்னிடம் அணியில் தொடர்ந்து இடம் பிடிக்க வேண்டுமென்றால், காலையிலேயே எழுந்து நன்றாக ஓட வேண்டும் எனக் கூறினார்’’ என்றார்.

சச்சின் தெண்டுல்கர் கேப்டன் பதவியில் இருந்த விலகிய பின் சவுரங் கங்குலி 2000-த்தில் கேப்டன் பதவியை ஏற்றார். இந்திய அணி மேட்ச் பிக்சிங்கால் ஈடுபட்டு சீரழிந்த நிலையில் அணியை திறம்பட வழி நடத்தி சென்று தலைநிமிரச் செய்தவர் கங்குலி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »