Press "Enter" to skip to content

அதிரடியாக மட்டையாட்டம் செய்யும் நாளை எதிர்பார்க்கிறேன் – ரோகித் சர்மா

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா, அதிரடியாக பேட்டிங் செய்யும் நாளை எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மும்பை:

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வீடுகளில் பயிற்சி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உள் அரங்கில் கிரிக்கெட் விளையாட போதுமான இடம் இருந்தால் நன்றாக இருக்கும் என விரும்புகிறேன். ஆனால் மும்பையில் இடங்கள் எல்லாம் நெரிசலாக காணப்படுகின்றன. எனவே அபார்ட்மெண்டை விட்டு வெளியேற முடியாது.

மும்பையில் விளையாட்டுப் பகுதிகளை உள்ளடக்கிய சொந்த வீடு வாங்குவது அவ்வளவு எளிதல்ல. இங்கு எல்லாம் விலை அதிகம். நான் அபார்ட்மெண்டில் வசிக்கிறேன். நல்லவேளையாக அதில் பால்கனி உண்டு. எனது பயிற்சியாளர் கூறியபடி அந்த இடத்தில் உடற்பயிற்சி செய்து வருகிறேன். உடற்பயிற்சிக் கூடங்களை விரைவில் திறப்பார்கள். அப்போது அங்குச் சென்று பயிற்சி மேற்கொள்வேன்.

என்னுடைய பேட்டிங் பயிற்சியை, ஆட்டத்தை மிஸ் செய்கிறேன். அதிரடியாக பேட்டிங் செய்யும் நாளை எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »