Press "Enter" to skip to content

கொலை செய்ததுபோல் உணர்ந்தேன்: ரசிகர்கள் வீட்டின் மீது கல் வீசியதை நினைவு கூர்ந்தார் யுவராஜ் சிங்

இரண்டு உலக கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த யுவராஜ் சிங்கிற்கு 2014 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டி மிகவும் மோசமாக அமைந்தது.

இந்திய கிரிக்கெட் அணி 2007-ம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை இரண்டையும் இந்திய அணி கைப்பற்ற யுவராஜ் சிங் முக்கிய பங்கு வகித்தார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

2014-ம் ஆண்டு வங்காளதேசத்தில் டி20 உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா – இலங்கை அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. டெத் ஓவர்களை யுவராஜ் சந்தித்தார். அதிரடியாக விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மிகவும் திணறினார்.

ஒரு கட்டத்தில் யுவராஜ் சிங் அவுட்டாகி சென்றால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் நினைக்க தொடங்கிவிட்டனர். இறுதியில் 21 பந்தில் 11 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் இந்திய அணி தோல்வியை சந்திக்க நேரிட்டது. அதன்பிறகு யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை சரியத் தொடங்கியது என்று கூறலாம்.

வீரர்கள் இந்தியா திரும்பிய நிலையில் யுவராஜ் சிங்கின் வீட்டின் மீது கற்களை வீசி ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

அந்த சம்பவம் யாரோ ஒருவரை யாரோஒருவரை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போவது போன்று உணர்ந்தேன் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில் ‘‘ஒட்டுமொத்த இன்னிங்ஸ்-க்கும் நானே பொறுப்பு எடுத்துக் கொள்கிறேன் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நான் சிறப்பாக விளையாடவில்லை. துரதிருஷ்டவசமாக அது உலக கோப்பை இறுதி போட்டியாக அமைந்து விட்டது. அது மற்ற போட்டியாக இருந்திருந்தால் இந்த அளவிற்கு ஆய்வு இருந்திருக்காது.

நான் வீட்டிற்கு திரும்பியபோது, என்னை வில்லன் போன்று உணர்ந்தேன். நான் விமான நிலையத்திற்கு வந்தபோது என்னைத் தாக்கினார்கள். நல்லவேளையாக ஹெட்போன் மாட்டியிருந்தேன். என்னை நோக்கி கத்திக் கொண்டிருந்தார்கள்.

எனது வீட்டின் மீது சிலர் கற்களை எறிந்தனர். அப்போது யாரோ ஒருவர் மற்றொருவரை கொலை செய்து ஜெயிலுக்கு சென்று கொண்டிருந்த குற்றவாளி போன்று என்னை உணர்ந்தேன். ஆனால் அதில் இருந்து உடனடியாக பழைய நிலைக்கு திரும்பினேன். அப்போது நடந்ததை என்னால் தற்போதும் நினைத்து பார்க்க முடியும்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »