Press "Enter" to skip to content

விராட் கோலி நிச்சயம் விரும்பமாட்டார்: நசீர் ஹுசைன் சொல்கிறார்

கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க விராட் கோலி நிச்சயம் விரும்பமாட்டார் என இங்கிலாந்து முன்னாள் வீரர் நசீர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. மீண்டும் கிரிக்கெட் தொடங்கியதும் எவ்வளவு போட்டிகளை நடத்த முடியுமோ, அவ்வளவு போட்டிகளை நடத்த ஒவ்வொரு கிரிக்கெட் போர்டுகளும் திட்டமிட்டுள்ளன.

ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. அப்படி நடந்தால் ஒவ்வொரு கிரிக்கெட் போர்டுகளும் தலா இரண்டு அணிகளை தயார் செய்ய வேண்டும்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இதற்கு தயாராக இருக்கின்றன. இங்கிலாந்து கிரிக்கெட்டை பொறுத்த வரையில் டெஸ்ட் அணிக்கு ஜோ ரூட் கேப்டனாக இருக்கிறார். ஒயிட்-பால் கிரிக்கெட் அணிக்கு மோர்கன் கேப்டனாக உள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் மற்றும் ஒயிட்-பால் அணி முற்றிலும் மாறுபட்டது. இதனால் இங்கிலாந்து எளிதாக இரண்டு அணிகளை தயார் செய்து விடும்.

அதேபோல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் அணிக்கு டிம் பெய்ன் கேப்டனாக உள்ளார். ஒயிட்-பால் கிரிக்கெட் அணிக்கு ஆரோன் பிஞ்ச் கேப்டனாக உள்ளார். வீரர்களை பிரிப்பதில்தான் பிரச்சனை ஏற்படும்.

ஆனால் இந்திய அணியில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டுக்கும் விராட் கோலிதான் கேப்டனாக இருக்கிறார். இந்திய கிரிக்கெட் வாரியமும் இரண்டு அணிகளை தயார் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அப்படி பிரிக்கப்பட்டால் விராட் கோலி கேப்டன் பதவியை இழக்க வேண்டியிருக்கும்.

ஆனால் விராட் கோலி ஒருபோதும் கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க விரும்பமாட்டார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நசீர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் மூன்று வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் கேன் வில்லியம்சன்தான் கேப்டனாக இருக்கிறார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »