Press "Enter" to skip to content

சதத்திற்குப் பிறகு நீக்கியது ஏன்?: இதுவரை டோனியிடம் கேட்டது கிடையாது- மனோஜ் திவாரி

சதம் அடித்து ஆட்ட நாயகன் விருது பெற்ற போட்டிக்குப் பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை டோனியிடம் கேட்டது கிடையாது என மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி (வயது 34). முடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன இவர் கடந்த 2008-ம் ஆண்டு தனது 22 வயதில் இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். அதிர்ஷ்டம் இல்லாத சில வீரர்களில் இவரும் ஒருவர்.

2011-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 104 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

ஆனால் அடுத்த 14 போட்டிகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதுகுறித்து அப்போதைய கேப்டன் எம்எஸ் டோனியுடன் இதுவரை நான் கேட்டது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மனோஜ் திவாரி கூறுகையில் ‘‘தேசிய அணிக்காக விளையாடி சதம் அடித்து, ஆட்ட நாயகன் விருதை பெற்ற பிறகு, அடுத்த 14 போட்டிகளில் இடம் கிடைக்கவில்லை என்பதை நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

ஆனால் கேப்டன், பயிற்சியாளர் அல்லது நிர்வாகம் ஆகியவற்றின் சில ஐடியாக்களுக்கு நான் மதிப்பு அளிக்கிறேன். ஏனென்றால், அந்த நேரத்தில் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ?, அதற்கு நாம் வீரர்கள் என்ற அடிப்படையில் மதிப்பு அளிக்க வேண்டும். அவர்கள் எனக்குப் பதிலாக வேறு வீரரை நினைத்திருக்கலாம்.

டோனியிடம் இதுகுறித்து கேட்ட வேண்டும் என்று உண்மையிலேயே நினைத்தேன். இந்திய அணியின் கேப்டனாக இருந்த டோனியிடம், அந்த நேரத்தில் இதுகுறித்து கேட்க வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை அல்லது தைரியம் இல்லை என்று சொல்லலாம். சீனியர் வீரர்களுக்கு மிகப்பெரிய அளவில் மதிப்பு அளிக்கும்போது, இதுபோன்ற விஷங்களை கேட்க தாமாகவே தடுக்கப்பட்டு விடுவோம். ஆகவே, நான் இதுவரை அவரிடம் இதுகுறித்து கேள்வி கேட்டது கிடையாது’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »