Press "Enter" to skip to content

வங்கதேசத்தில் மட்டும்தான் ரசிகர்களின் ஆதரவு கிடைப்பதில்லை – ரோகித் சர்மா

வங்கதேசத்தில் மட்டும் தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

மும்பை:

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சிறுவர்கள் அவர்களை தங்களின் ஆதர்ஷ புருஷர்களாக பார்த்து ஆராதிக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணிக்கு உலகளவில் ரசிகர்கள் எண்ணிக்கை மிக அதிகம். வேறு எந்த நாட்டு கிரிக்கெட் அணிக்கும் கிடைக்காத பெருமை இது.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளிலுள்ள சில மைதானங்களில் உள்ளூர் அணியை விடவும் இந்திய அணிக்கு அதிக ஆதரவு கிடைத்த தருணங்கள் எல்லாம் உண்டு.

இந்நிலையில், வங்கதேச வீரர் தமிம் இக்பாலுடன் இன்ஸ்டாகிராமில் ரோகித் சர்மா உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவிலும் வங்கதேசத்திலும் உணர்ச்சிமிக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். நாம் தவறு செய்யும்போது எல்லா முனைகளிலிருந்தும் கண்டிப்பார்கள். வங்கதேசத்தில் விளையாடச் செல்லும்போது நம்பமுடியாத காட்சியாக இருக்கும்.

ரசிகர்களின் ஆதரவின்றி இந்திய அணி எங்கும் விளையாடுவதில்லை. ஆனால் வங்கதேசத்தில் மட்டும்தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை. இப்போதுள்ள வங்கதேச அணி வீரர்களான நீங்கள் அனைவரும் மிகவும் தீவிரமாக விளையாடுகிறீர்கள். 2019 உலகக் கோப்பையில் அனைவரும் அதைப் பார்த்தார்கள் என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »