Press "Enter" to skip to content

அடிலெய்டு பகல்-இரவு சோதனை நிச்சயமாக சவாலாக இருக்கும்: ரோகித் சர்மா

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனான ரோகித் சர்மா, ஆஸ்திரேலிய மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் சவாலானதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் டிசம்பர் 3-ந்தேதி கப்பாவில் நடக்கிறது.

2-வது டெஸ்ட் டிசம்பர் 11-ந்தேதி அடிலெய்டில் பகல்-இரவு டெஸ்டாக நடக்க இருக்கிறது. இந்த டெஸ்ட் மிகவும் சவாலானதாக இருக்கும் என இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மோன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘இதுவரை நான் பிங்க் பால் டெஸ்டில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடவில்லை. மனநிலை எப்படி இருக்கும் என்று கேட்கிறீர்கள். உண்மையிலேயே அடிலெய்டு டெஸ்ட் சவாலானதாக இருக்கும்’’ என்றார்.

இந்திய அணி கொல்கத்தாவில் வங்காளதேசத்திற்கு எதிராக ஒரேயொரு பிங்க் பால் டெஸ்டில் மட்டும் விளையாடியுள்ளது. அதன்பின் நேராக ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இருக்கிறது.

ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் இதுவரை ஏழு பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. ஏழு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது கிடையாது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »