Press "Enter" to skip to content

தடைக்காலம் முடிவடைவதால் கேரள மாநில கிரிக்கெட் அணியில் மீண்டும் ஸ்ரீசந்த்

பிசிசிஐ-யின் ஏழு ஆணடு கால தடைக்காலம் முடிவடைய இருப்பதால், வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசந்த்-ஐ ரஞ்சி அணியில் சேர்க்க கேரள மாநில கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசந்த். இவர் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்போது மேட்ச்-பிக்சிங்கில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தியது.

இதனால் பிசிசிஐ அவருக்கு ஆயுட்கால தடைவிதித்தது. போலீஸ் வழக்கை எதிர்த்து கோர்ட்டில் முறையிட்டார். அப்போது குற்றம் செய்யப்படவில்லை என்று கோர்ட் உத்தரவிட்டது. மேலும் 2018-ம் ஆண்டு கேரளா ஐகோர்ட் பிசிசிஐ-யின் தடையை நீக்கி உத்தரவிட்டது.

கடந்த வருடம் உச்சநீதிமன்றத்தில் ஸ்ரீசந்த் குறித்த வழக்கின்போது, தடைக்காலத்தை குறைக்க பிசிசிஐ-யின் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. இதனால் பிசிசிஐ தடையை ஏழாண்டாக குறைத்தது.

ஸ்ரீசந்தின் ஏழாண்டு தடைக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் கேரள மாநில கிரிக்கெட் சங்கம் அவரை ரஞ்சி கோப்பைக்கான கேரள அணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. ஆனால் உடற்தகுதி பெற்றால் மட்டுமே அணியில் இடம் பெறுவார்.

இதுகுறித்து ஸ்ரீசந்த் கூறுகையில் ‘‘எனக்கு வாய்ப்பு கொடுத்த கேரள மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு நான் உண்மையிலேயே நன்றிகடன் பட்டவன். என்னுடைய உடற்தகுதியை பெற்று அணிக்கு சிறந்த முறையில் திரும்புவேன். இது அனைத்து சர்ச்சைக்கும் விடைகொடுக்க வேண்டிய நேரம்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »