Press "Enter" to skip to content

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடர் ‘Raise The Bat’ என அழைக்கப்படும்: இங்கிலாந்து அறிவிப்பு

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் Raise The Bat என அழைக்கப்பட இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அதன்பின் முதன்முறையாக இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 8-ந்தேதி நடைபெற இருக்கிறது.

இதுதான் கொரோனா தாக்கத்திற்கு பிறகான முதல் கிரிக்கெட் போட்டியாகும். இந்த போட்டியை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் இங்கிலாந்தில் ஏராளமான கிரிக்கெட் கிளப்புகள் உள்ளன. இந்த கிளப்பில் உள்ளவர்கள் டாக்டர்கள், ஆசிரியர்கள், நர்ஸ்கள் என தொழில்களில் உள்ளனர். கொரோன வைரஸ் தொற்றின் இக்கட்டான நிலையில் இவர்களின் பங்கு மிகமிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இவர்கள்தான் முன்கள பணியாளர்களாக திகழ்ந்தனர்.

இதனால் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த டெஸ்ட் தொடருக்கு ‘Raise The Bat’ என பெயர் சூட்டியுள்ளனர்.

மேலும், உள்ளூர் கிளப்புகள் பரிந்துரை செய்த முன்கள பணியாளர்களின் பெயர்கள் பொறித்த டி-சர்ட் அணிந்து இங்கிலாந்து வீரர்கள் காட்சியளிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீரர்களின் டி-சர்ட்டில் பொறிக்கப்பட்டுள்ள பெயரின் நபர் குறித்து டிஜிட்டல் போர்டில் தகவல்கள் தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ECB announces #RaiseTheBat Test Series with players wearing key workers’ names on shirts 🏏 👏

— England and Wales Cricket Board (@ECB_cricket)

June 22, 2020

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »