Press "Enter" to skip to content

பொதுமுடக்கம் விதிமுறை மீறல்: கிரிக்கெட் வீரர் ராபின் சிங்கின் தேரை பறிமுதல் செய்த காவல் துறை

சென்னையில் பொதுமுடக்கத்தை மீறியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங்கின் காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த கடந்த 19-ந்தேதியில் இருந்து முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் கார், இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்.

சென்னை திருவான்மியூர் சந்திப்பில் கடந்த 20-ம்தேதி முழு பொதுமுடக்கம் காரணமாக போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து காரில் வந்த ராபின் சிங் போலீசார் தடுத்துள்ளனர். அவசரமாக செல்வதற்கான தகுந்த காரணங்கள், இ-பாஸ் இல்லாததால் போலீசார் காரை பறிமுதல் செய்துள்ளனர்.

ராபின்சிங் இந்திய அணிக்காக ஒரேயொரு டெஸ்ட் மற்றும் 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஓய்வு பெற்றபின் பல்வேறு லீக் அணிகளில் பணிபுரிந்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »