Press "Enter" to skip to content

ஐபிஎல் அல்லாத வருடம்: நினைத்துப் பார்க்கவே கடினமாக இருக்கிறது என்கிறார் ஜான்டி ரோட்ஸ்

ஐபிஎல் இல்லாமல் இந்த வருடத்தை நினைத்து பார்க்கவே கடினமாக உள்ளது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறாமல் இருந்தால் ஐபிஎல் தொடரை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

ஆசிய கோப்பை டி20 தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பை குறித்து இன்று முடிவு தெரியும். இந்த நிலையில் ஐபிஎல் இல்லாத இந்த வருடத்தை கடந்து செல்வதை நினைக்கவே கடினமாக உள்ளது என்று ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜான்டி ரோட்ஸ் கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டி இல்லாமல் இந்த வருடம் கடந்து போவதை நினைக்க மிகவும் கஷ்டமாக இருக்கும். 2008-ல் இருந்து கிரிக்கெட் அட்டவணையில் இது ஒரு அங்கமாக உள்ளது. மிகப்பெரிய தொடக்க ஆண்டில் இருந்து, ஒவ்வொரு வருடமும் போட்டியை சிறப்பாக நடத்த பிசிசிஐ முயற்சி செய்து வருகிறது.

ஐபிஎல் போட்டி நிதி மற்றும் எதிர்கால கிரிக்கெட் வீரர்களுக்கும் மிக முக்கியமானதாக இருக்கிறது. உலகின் சிறந்த வீரர்கள் இந்தத் தொடரில் விளையாடுகிறார்கள். அதனால் ஐபிஎல் இல்லாமல் செல்வதை நினைத்து பார்ப்பது கடினம். என்னைப் பொறுத்த வரைக்கும் ஐபிஎல் இல்லாத கிரிக்கெட் அட்டவணை அர்த்தமற்றது’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »