Press "Enter" to skip to content

மான்செஸ்டர் சோதனை: 469 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் – வலுவான நிலையில் இங்கிலாந்து

மான்செஸ்டர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 469 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து, ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2 ஆம் நாள் ஆட்டம் முடிவடைந்தது.

மான்செஸ்டர்:

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 82 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்திருந்தது. டொமினிக் சிப்லி 86 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 59 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து நேற்று இரண்டாம் நாள் தொடங்கியது.  ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் டொமினிக் சிப்லி சதம் அடித்தார். அதனைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸும் சதம் விளாசினார். 

இங்கிலாந்து அணி 341 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. 

டொமினிக் சிப்லி 120 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ஆனால், சிறப்பாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 17 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 176 ரன்கள் குவித்து ரோச் பந்து வீச்சில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதையடுத்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 469 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோஸ்டன் சேஸ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. பிராத்வேட் மற்றும் ஜான் கேம்பால் அந்த அணியின் தொடக்க

ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஜான் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாம் கர்ரன் பந்து வீச்சில் எல்டபுள்யூ முறையில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

பின்னர் வந்த ஜோசப் நிதான் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராத்வேட் 6 ரன்களுடனும், ஜோசப் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »