Press "Enter" to skip to content

அம்ப்ரோஸ்-க்கு பின் 26 ஆண்டுகள் கழித்து ‘200’ மைல்கல்லை எட்டிய வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சளார்

இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்திய கேமர் ரோச் 200 விக்கெட்டுக்களை பதிவு செய்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த பந்து வீச்சாளர்களாக திகழ்ந்தவர்கள் அம்ப்ரோஸ், வால்ஷ். இருவரும் இணைந்து எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக திகழ்ந்தனர். இருவரும் ஓய்வு பெற்ற பின் வெஸ்ட் இண்டீஸ் அணிகளில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்து விளையாடினர். அவர்களால் நீண்ட காலம் விளையாட முடியவில்லை.

குறைந்தபட்சம் டெஸ்டில் 200 விக்கெட்டுக்கள் கூட வீழ்த்த முடியாதவர்களாக இருந்தனர். அம்ப்ரோஸ் 1994-ம் ஆண்டு 200-வது விக்கெட்டை பதிவு செய்தார்.

அதன்பின் மான்செஸ்டரில் நேற்றைய போட்டியின்போது கிறிஸ் வோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியபோது கேமர் ரூச் 200-வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார்.

அம்ப்ரோஸ்-க்குப்பின் 26 ஆண்டுகள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் ஒருவர் 200 விக்கெட்டை கைப்பற்றியது இதுவே முதல்முறையாகும். ரோச் முதல் இன்னிங்சில் 72 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

32 வயதாகும் கேமர் ரோச் 2009-ல் வங்காளதேசத்திற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 201 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

வால்ஷ் 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி  519 விக்கெட்டுக்களுடன் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களில் முதல் இடத்தில் உள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »