Press "Enter" to skip to content

கடந்த 12 ஐபிஎல் தொடர்களை விட இது மிகமிக முக்கியமானது: கம்பிர் சொல்கிறார்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் 2020 ஐபிஎல் டி20 லீக் இதற்கு முன்பு நடைபெற்றதைவிட முக்கியமானது என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் ஐபிஎல் தொடர் நடக்குமா? என்ற சந்தேகம் இருந்த நிலையில், டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் செப்டம்பர் 19-ந்தேதியில் இருந்து நவம்பர் 8-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் போட்டியை நடத்த சாத்தியமில்லை என்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவின் ஒவ்வொரு மக்களும் கொரோனாவை பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டிற்குள்ளேயே முடங்கி மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மிகப்பெரிய விளையாட்டுத் தொடர் நடத்தப்படுவது மக்களின் மனநிலையை மாற்றும் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘விளைாயட்டு போட்டி எங்கே நடக்கிறது என்பது முக்கியமல்ல. ஆனால்,  ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளது. எந்தவொரு வடிவிலான போட்டிற்கும் சிறந்த இடம். முக்கியமான இது நாட்டு மக்களும் மனநிலையை மாற்றக் கூடியதாக இருக்கும். இது எந்த அணி வெற்றி பெறும், எந்த வீரர் அதிக ரன் அடிப்பபார், யார் அதிக விக்கெட் வீழ்த்துவார் என்பது பற்றி அல்ல. நாட்டு மக்களின் மனநிலையை மாற்றக் கூடியதாக இருக்கும்.

இதனால் இந்த ஐபிஎல் மற்ற ஐபிஎல் தொடர்களை விட முக்கியமானது. ஏனென்றால், இது தேசத்திற்காக இருக்கும் என்று நினைக்கிறேன்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »