Press "Enter" to skip to content

உயிர்-பாதுகாப்பு வளையத்தில் இருந்து ஐந்து வீரர்களை வெளியீடு செய்தது இங்கிலாந்து

மான்செஸ்டரில் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், உயிர்-பாதுகாப்பு வளையத்தில் இருந்து ஐந்து வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது இங்கிலாந்து.

கொரோனா பாதிப்பிற்குப் பிறகு முதன்முறையாக இங்கிலாந்தில் கடந்த 8-ந்தேதி சர்வதேச கிரிக்கெட் தொடங்கியது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் வீரர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக உயிர்-பாதுகாப்பு வளையம் (Bio-Secure Bubble) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வளையத்திற்குள் இருக்கும் வீரர்கள், ஸ்டாஃப்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வெண்டும்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்சர் இந்த வளையத்தை விட்டு வெளியேறியதால் 2-வது போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது 3-வது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணியில் டான் லாரன்ஸ், கிரேக் ஓவர்ட்ன், ஒல்லி ராபன்சன், ஒல்லி ஸ்டோன் ஆகியோர் இடம் பெறவில்லை. இதனால் அவர்களை ரிலீஸ் செய்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு.

அதேபோல் ஜோ டென்லியை அயர்லாந்து தொடருக்கான ஒருநாள் கிரிக்கெட் முகாமிற்கு செல்ல ரிலீஸ் செய்துள்ளது.

ஐந்து பேரை வெளியேற்றி நிலையில் இன்னும் 6 வீரர்களை தயாராக வைத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலாம் ஏராளமான மாற்று வீரர்களை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தயாராக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »