Press "Enter" to skip to content

மான்செஸ்டர் சோதனை: வெஸ்ட் இண்டீஸ்-க்கு 399 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் விளாசி டிக்ளேர் செய்ய, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 369 ரன்கள் குவித்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்திருந்தது. ஜேசன் ஹோல்டர் 24 ரன்னுடனும், டவ்ரிச் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜேசன் ஹோல்டர் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். டவ்ரிச் 37 ரன்னில் வெளியே வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 197 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகள் அள்ளினார்.

பின்னர் 172 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களான ரோரி பேர்ன்ஸ், டொமினிக் சிப்லி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிப்லி 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து கேப்டன் ஜோ ரூட் களம் இறங்கினார். இவர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோரி பேர்ன்ஸ் 90 ரன்னில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் 56 பந்தில் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதல் இன்னிங்சில் 172 ரன்களுடன் மொத்தமாக இங்கிலாந்து 398 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு மேல் மீதம் இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகளை பாதுகாப்பது மிகமிக கடினம்.

399 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 10 ரன்கள் அடிப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »