Press "Enter" to skip to content

ஐந்து அணிகள் பங்கேற்கும் ‘லங்கா பிரிமீயர் லீக்’ அறிமுகம்: ஆகஸ்ட் 28-ல் தொடங்குகிறது

இலங்கை கிரிக்கெட் போர்டின் அறிமுக டி20 லீக்கான லங்கா பிரிமீயர் லீக் அடுத்த மாதம் 28-ந்தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரை நடத்துவது போல் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், பாகிஸ்தான், ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுகளும் டி20 லீக்கை நடத்தி வருகின்றன. 

அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐந்து அணிகள் கலந்து கொள்ளும் லங்கா கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்ய உள்ளது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 28-ந்தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 30-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

கொழும்பு, கண்டி, காலே, தம்புல்லா மற்றும் ஜாஃப்னா ஆகிய ஐந்து நகரங்களின் பெயரில் அணிகள் களம் இறங்குகின்றன. 70-க்கும் மேற்பட்ட  சர்வதேச வீரர்கள் மற்றும் பிரபல பயிற்சியாளர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானம், ராங்கிரி தம்புல்லா சர்வதேச கிரிக்கெட் மைதானம், பலேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், சூரியவேவா மகிந்த ராஜபக்சே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். ஸ்பான்சர் குறித்த ஏலம் வருகிற 30-ந்தேதி நடைபெற இருக்கிறது.

சரியான நேரத்தில் போட்டி அட்டவணை வெளியடப்படும் என்று இலங்கை கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »