Press "Enter" to skip to content

எம்.எஸ். டோனியை மீண்டும் பார்ப்பது ஐபிஎல் 13-வது சீசனுக்கு கூடுதல் சிறப்பாகும்: சேவாக்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனியை மீண்டும் பார்ப்பது ஐபிஎல் 13-வது சீசனுக்கு கூடுதல் சிறப்பாகவும் என முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்.எஸ். டோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிராக விளையாடிய பின் கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை.

சுதந்திர தினத்தன்று (கடந்த ஆகஸ்டு 15-ந்தேதி) சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறது.

ஐபிஎல் போட்டியை தவிர்த்து மற்ற போட்டிகளில் எம்எஸ் டோனியை அதிக அளவில் பார்க்க இயலாது. இந்நிலையில் டோனியை மீண்டும் பார்ப்பது ஐபிஎல் 13-வது சீசனுக்கு கூடுதல் சிறப்பு என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘இந்த ஐபிஎல் தொடர் ஒவ்வொருவருக்கும் கூடுதல் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். வீர்கள், ரசிகர்களுக்கு டோனி மீண்டும் பிட்சில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கும் என்பது உறுதி. இன்னும் ஏராளமானவை இருக்கிறது. நான் சொல்ல தேவையா?.

லாக்டவுன் காலத்தில் வீட்டில் இருக்கும்போது நான் ஏராளமான பழைய போட்டிகளை பார்த்து நேரத்தை செலவழித்தேன. என்னுடைய சொந்த சுற்று உள்பட பலவவற்றை குறித்து ஆராய்ந்தேன். கிரிக்கெட் இந்தியர்கிளின் டிஎன்ஏ-வில் ஒரு பகுதியாக இருக்கிறது. அது திரும்புவதற்காக நாங்கள் பெருமூச்சுடன் காத்திருக்கிறோம்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »