Press "Enter" to skip to content

இத்தாலி ஓபன் டென்னிஸ் – அரைஇறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

இத்தாலி ஓபன் டென்னிசில் செர்பியாவின் ஜோகோவிச் ஜெர்மனி வீரர் டொமினிக் கோப்பெரை போராடி தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

ரோம்:

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் டொமினிக் கோப்பெரை (ஜெர்மனி) போராடி தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

பெண்கள் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அஸரென்காவை (பெலாரஸ்) வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »