Press "Enter" to skip to content

கேட்ச் மிஸ்சிங் மேட்ச் போச்சு: சென்னை தோல்வி ஒரு அலசல்

தவானுக்கு பல கேட்ச்களை மிஸ் செய்ய, கடைசி ஓவரை ஜடேவிடம் கொடுத்து அதற்கு டோனி விளக்கம் அளிக்க சிஎஸ்கே தோல்வி குறித்து ஆராய்வோம்.

சிஎஸ்கே – டெல்லி போட்டி நேற்று ஷார்ஜாவில் நடந்தது. தொடக்கத்தில் ரன்குவிப்பு ஆடுகளமாக இருந்த ஷார்ஜா, தற்போது ட்ரிக்கி பிட்ச்-ஆக மாறிவிட்டது.

இதனால் சேஸிங்கை மறந்து டாஸ் வெல்லும் அணி முதலில் மட்டையாட்டம் செய்ய ஆர்வம் காட்டுகின்றன. அதேபோல் டாஸ் சிஎஸ்கே-வுக்கு சாதகமாக விழ, தல டோனி மட்டையாட்டம் தேர்வு செய்ததார்.

வந்தவரைக்கும் லாபம் என தொடக்க வீரராக களம் இறக்கப்பட்ட சாம் கர்ரன் டக்அவுட் ஆனாலும், டு பிளிஸ்சிஸ் ஃபார்முக்கு திரும்பி 58 ஓட்டங்கள் அடிக்க, வாட்சன் தன் பங்குக்கு 36 ஓட்டங்கள் அடித்தார்.

டோனி 3 ஓட்டத்தில் வெளியேற அம்பதி ராயுடு (25 பந்தில் 45), ஜடேஜா (13 பந்தில் 33) ஜோடி கடைசியில் 21 பந்தில் 50 ஓட்டங்கள் சேர்க்க டெல்லி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தும் அளிவிற்கு சிஎஸ்கே 179 ஓட்டங்கள் எடுத்தது,

179 ரன்களை டெல்லி அணி எடுக்க முடியாத அளவிற்கு பந்து வீச வேண்டும் என்ற நோக்கத்தில் சிஎஸ்கே சிங்கங்கள் களம் இறங்கின.

நீங்கள்தான் முதல் சுற்றில் மட்டையிலக்கு வீழ்த்துவீர்களா? என்று சவால் விடும் வகையில் இன்-ஸ்விங் சிங்கம் தீபக் சாஹர் பிரித்வி ஷாவை 2-வது பந்திலேயே வெளியேற்றினார். 5-வது ஓவர் முதல் பந்தில் ரகானேவை 8 ஓட்டத்தில் வெளியேற்றி பவர் பிளே-யில் சூப்பர் கம்-பேக் கொடுத்தார்.

பவர் பிளேயில் டெல்லி 6 சுற்றில் 2 மட்டையிலக்கு இழப்பிற்கு 41 ஓட்டங்கள் அடித்திருந்தது. 7-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் தவான் கொடுத்த கேட்ச்யை தீபக் சாஹர் பிடிக்கத் தவறினார். அப்போது தவான் 17 பந்தில் 25 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அத்துடன் டெல்லியின் ஆட்டம் க்ளோஸ் ஆகியிருக்கும்.

தவான் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி விளாச ஆரம்பித்தார். 10-வது ஓவரின் 3-வது பந்தில் ஒரு ஓட்டத்தை எடுத்து 29 பந்தில் அரைசதம் அடித்தார். பிராவோ வீசிய இது ஓவரின் கடைசி பந்தில் தல டோனி ஒரு கேட்ச் விட்டார். தவான் சரியாக 50 ஓட்டத்தில் வெளியேறியிருப்பார்.

சென்னை அணி அந்த வாய்ப்பையும் தவறவிட்டது. அதன்பின் பந்து வீச்சை டைட் செய்ய டெல்லி அணி தடுமாற ஆரம்பித்தது. பிராவோ 23 ஓட்டத்தில் ஷ்ரேயாஸ் அய்யரை வெளியேற்றினார்.

16-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் லட்டு மாதிரி கொடுத்த கேட்ச்யை அம்பதி ராயுடு தவறிவிட்டார். 3-வது முறையாக 79 ஓட்டத்தில் இருந்து தப்பினார். 

மறுபக்கத்தில் ஸ்டாய்னிஸ் 14 பந்தில் 24 ஓட்டத்தில் தாகூர் பந்தில் வெளியேற, டெல்லி அணிக்கு கடைசி 24 பந்தில் 41  ஓட்டங்கள் தேவைப்பட்டது. 

18-வது சுற்றில் ஷர்துல் தாகூர் 9 ரன்களும், 19-வது சுற்றில் சாம் கர்ரன் ஒரு மட்டையிலக்கு உடன் 4 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு திருப்பு முனை ஏற்படுத்தினார். கடைசி சுற்றில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

சரி கடைசி ஓவரை பிராவோ வீசுவார். ஸ்லோவர் ஒன், யார்க்கர், கட்டர் பால் என யுக்தியை பயன்படுத்தி டெல்லியை கட்டுப்படுத்தி வெற்றியை தேடுக்கொடுப்பார் என ரசிகர்கள் நினைக்க, அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில ஜடேஜாவை பந்து வீச அழைத்தார்.

இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும்போது டோனி எப்போதுமே லெக் ஸ்பின்னரையோ, லெப்ட் ஆஃர்ம் (Left Arm) ஸ்பின்னரையே பந்து வீச அழைக்கமாட்டார். தவான், அக்சார் பட்டேல் என இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் நிற்க லெப்ட் ஆஃர்ம் ஸ்பின்னர் ஜடேஜாவை பந்து வீச அழைத்ததும் ரசிகர்கள் ஜர்க்-யாகினர்.

முதல் பந்து வைடு, அதற்கு பதிலான பந்தில் தவான் ஒரு ரன். 2-வது பந்தை பந்தை அக்சார் பட்டேல் இமாயல சிக்சருக்கு தூக்கினார். அப்போது ரசிகர்கள் போட்டி கையில் இருந்து சென்றதாக நினைத்தனர். அதோடு மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு பந்துகளையும் அடுத்தடுத்து சிக்சருக்கு கிளப்பினார்.

இதனால் சிஎஸ்கே 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது. தவானுக்கு மூன்று கேட்கள் விட்டு அவரை சதம் அடிக்க வைத்ததோடு, ஒருபக்கம் நங்கூரம் மாதிரி நிற்க வைத்தது தோல்விக்கு முக்கிய காரணம்.

தோல்விக்கு பின் கடைசி ஓவரை வீச பிராவோ ஃபிட் (Fit) ஆக இல்லை என டோனி கூறினாலும் ஜடேஜாவிடம் கொடுத்த முடிவை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சாம்கர்ரன், ஷர்துல் தாகூர் 18 மற்றும் 19-வது சுற்றில் சூப்பர் கம்-பேக் கொடுத்த பின்னரும் டோனி முடிவால் கடைசி சுற்றில் வெற்றியை பறிகொடுத்தது சிஎஸ்கே.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »