Press "Enter" to skip to content

ஆஸ்திரேலியா – இந்தியா இடையில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்: அட்டவணை வெளியீடு

இந்திய அணி நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடுகிறது.

ஐபிஎல் 13-வது பருவம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் முடிந்த உடன் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறது.

நான்கு சோதனை போட்டிகளில் விளையாட இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுமா? என்பதில் சந்தேகம் இருந்தது.

இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றபின் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலியா அரசு தெரிவித்தது. இந்த காலக்கட்டத்தை குறைக்க வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் மூன்று ஒருநாள், மூன்று டி20, நான்கு சோதனை போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால் போட்டி அட்டவணையை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி நவம்பர் 27-ந்தேதியில் இருநு்து டிசம்பர் 1-ந்தேதி வரை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. டிசம்பர் 4-ந்தேதி முதல் டிசம்பர் 8-ந்தேதி வரை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

முதல் சோதனை டிசம்பர் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையும், 2-வது சோதனை டிசம்பர் 26-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையும், 3-வது சோதனை ஜனவரி 7-ந்தேதி முதல் ஜனவரி 11-ந்தேதியும், 4-வது மற்றும் கடைசி சோதனை ஜனவரி 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரையும் நடைபெற இருக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »