Press "Enter" to skip to content

சோதனை போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஸ்மித்தின் செயல்பாடு எப்படி?

இந்தியாவுக்கு எதிராக சோதனை தொடரில் ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்மித் ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட சோதனை தொடர் அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்குகிறது. 2018-ல் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து சோதனை தொடரை 2-1 எனக் கைப்பற்றி சாதனைப் படைத்தது. அப்போது ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் கிடையாது.

தற்போது இருவரும் அணியில் உள்ளனர். மேலும் மார்னஸ் லாபஸ்சேன் அசுர ஃபார்மில் உள்ளார். இவர்கள் மூன்று பேரும் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலாக திகழ்வார்கள். குறிப்பாக ஸ்மித் எப்படி விளையாடுவார் என்பதே எதிர்பார்ப்பு.

ஆனால், ஏற்கனவே இந்திய பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஸ்மித் மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறார். இஷாந்த் சர்மாவுக்கு எதிராக 176 சராசரி வைத்துள்ளார். அஸ்வினுக்குத் எதிராக 116 சராசரி வைத்துள்ளார். முகமது ஷமிக்கு 112 சராசரி வைத்துள்ளார்.

உமேஷ் யாதவுக்கு எதிராக 65.50 சராசரி வைத்துள்ளார். ஜடேஜாவுக்கு எதிராக 37.80 சராசரி வைத்துள்ளார். ஆனால் பும்ரா பந்து வீச்சை இதுவரை எதிர்கொள்ளவில்லை. ஸ்மித்திற்கு கடும் சவாலாக பும்ரா இருக்க வாய்ப்புள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »