Press "Enter" to skip to content

பெங்கால் அணிக்காக நீண்ட காலம் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா ஓய்வு

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான அசோக் திண்டா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

மேற்கு வங்காளத்தின் வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா. இவர் கடந்த 2005-ம் ஆண்டு கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 2020 வரை பெங்கால் அணிக்காக விளையாடினார். இந்த வருடம் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டிராபி டி20-யில் கோவா அணிக்காக விளையாடினார்.

இதுவரை 116 முதல்தர போட்டிகளில் விளையாடி 420 மட்டையிலக்குடும், 98 லிஸ்ட்-ஏ போட்டிகளில் 151 மட்டையிலக்குடுகளும், 147 டி20 போட்டிகளில் 151 மட்டையிலக்குடும் வீழ்த்திய அசோக் திண்டா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இவர் இந்திய அணிக்காக 13 ஒருநாள் போட்டிகளிலும், 9 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், புனே வாரியர்ஸ், ரைசிங் புனு சூப்பர்ஜெயன்ட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்காக 78 போட்டிகளில் விளையாடி 68 மட்டையிலக்கு வீழ்த்தியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »