Press "Enter" to skip to content

நியூசிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடக்கம்

நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது.

கொரோனா காலத்திற்குப் பிறகு கிரிக்கெட் போட்டி சகஜமாக நடைபெற தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா இங்கிலாந்து சென்று விளையாடியது. இந்தியா ஆஸ்திரேலியா சென்று விளையாடியது. ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது. இங்கிலாந்து இலங்கை சென்று விளையாடியது. தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது.

இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு அணிகளும் ஆர்வம் காட்டு வருகின்றன.

இந்த வகையில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

முதல் டி20 போட்டி நாளை கிரிஸ்ட்சர்ச்சில் நடக்கிறது. 2-வது போட்டி பிப்ரவரி 25-ந்தேதி டுனெடினிலும், 3-வது போட்டி மார்ச் 3-ந்தேதி வெலிங்கடனிலும், 4-வது போட்டி மார்ச் 5-ந்தேதி ஆக்லாந்திலும், 5-வது மற்றும் கடைசி போட்டி தவுரங்காவில் மார்ச் 7-ந்தேதியும் நடக்கிறது.

ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் விண்மீன்க், டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இடம்பெறவில்லை. நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன், டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி, மார்ட்டின் கப்தில் என முன்னணி வீரர்களுடன் களம் இறங்குகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »