Press "Enter" to skip to content

20 ஓவர் உலக கோப்பையை இந்தியா வெல்ல வாய்ப்பு- பட்லர் சொல்கிறார்

20 ஓவர் உலக கோப்பை நடத்தும் இந்திய அணி மிகவும் வலுவானதாக உள்ளது. இதனால் உலக கோப்பை வெல்ல அந்த அணிக்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. இன்றுள்ள சூழலில் இந்திய அணி மிகவும் சிறந்ததாக இருக்கிறது.

அகமதாபாத்:

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்த போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

இதுவரை ஆறு 20 ஓவர் உலக கோப்பை நடந்துள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் 2 முறையும், பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் ஒருமுறையும் உலக கோப்பையை வென்றுள்ளன.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காரணமாக கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த 20 ஓவர் உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டது. 7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையை இந்தியா கைப்பற்ற அதிகமான வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான ஐந்து 20 சுற்றிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி அகமதாபாத்தில் பயிற்சி பெற்று வருகிறது. பயிற்சிக்கு பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

20 ஓவர் உலக கோப்பை நடத்தும் இந்திய அணி மிகவும் வலுவானதாக உள்ளது. இதனால் உலக கோப்பை வெல்ல அந்த அணிக்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. இன்றுள்ள சூழலில் இந்திய அணி மிகவும் சிறந்ததாக இருக்கிறது.

20 ஓவர் உலக கோப்பையில் எல்லா அணிகளும் சிறப்பாக விளையாடும். அதே நேரத்தில் இந்தியா 3 வடிவிலான போட்டியிலும் வளமாக இருக்கிறது. இதனால் அந்த அணிக்கு கூடுதலான வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்.

உலக கோப்பை போட்டிக்கு முன்பு இந்தியாவில் 20 சுற்றிப் போட்டி தொடரில் விளையாடுவதால் எங்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். அது எங்களுக்கு சாதகமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »