Press "Enter" to skip to content

குர்ணால் பாண்ட்யாவை 5-வது பந்து வீச்சாளராக ஏற்க முடியாது – கவாஸ்கர்

குர்ணால் பாண்ட்யாவை 5-வது பந்து வீச்சாளராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.

புனே:

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று பிற்பகல் நடக்கிறது.

இரு அணிகளும் தலா ஒரு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் ஒருநாள் தொடரை கைப்பற்றுவது இந்தியாவா? இங்கிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சோதனை தொடரை 3-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. இதேபோல ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.

சோதனை, 20 ஓவர் தொடரை இழந்த இங்கிலாந்து ஆறுதலுக்காக ஒருநாள் தொடரை வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையில் இருக்கிறது.

இந்த நிலையில் குர்ணால் பாண்ட்யாவை 5-வது பந்து வீச்சாளராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்திய அணியின் பந்து வீச்சு பலவீனமாக இருந்ததை 2-வது போட்டியில் காண முடிந்தது. பென் ஸ்டோக்ஸ் இந்திய வீரர்களின் பந்துவீச்சை விளாசி தள்ளிவிட்டார்.

குர்ணால் பாண்ட்யா 5-வது பந்து வீச்சாளராக இருக்க முடியாது. அவரை 10 சுற்றுகள் வீசும் ஒரு பவுலராக ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற ஆடுகளங்களில் யசுவேந்திர சாஹல் போன்ற ஒரு பந்து வீச்சாளர் தேவை.

ஹர்த்திக் பாண்ட்யா மற்றும் குர்ணால் பாண்ட்யா இருவரும் இணைந்து 10 சுற்றுகள் வீச அனுமதிக்கலாம். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமானால், 4-வது, 5-வது மற்றும் 6-வது பந்து வீச்சாளர்கள் பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டும்.

புதுமுக வீரரான பிரசித் கிருஷ்ணா மிக சிறப்பாகவும், துல்லியமாகவும் பந்து வீசுகிறார். எனவே அவரை சோதனை அணியில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

2-வது போட்டியில் குர்ணால் பாண்ட்யா 6 ஓவர் வீசி 72 ரன்களை விட்டுக்கொடுத்தார். மட்டையிலக்கு எதையும் எடுக்கவில்லை. ஹர்த்திக் பாண்ட்யா ஒரு பந்துகூட வீசவில்லை.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »