Press "Enter" to skip to content

வங்காளதேசத்துக்கு எதிரான டி20 – நியூசிலாந்து 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

வங்காள தேசத்துக்கு எதிரான முதல் 20 ஒவர் போட்டியில் நியூசிலாந்து அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹேமில்டன்:

வங்காள தேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் ஹேமில்டனில் இன்று நடந்தது.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 3 மட்டையிலக்கு இழப்புக்கு 210 ஓட்டத்தை குவித்தது. தேவன் கான்வாய் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 52 பந்தில் 92 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 11 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும்.

வில்யங் 30 பந்தில் 53 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), மார்ட்டின் கப்தில் 27 பந்தில் 35 ரன்னும் (3 பவுண் டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

211 ஓட்டத்தை எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்காள தேசம் அணி களமிறங்கியது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 மட்டையிலக்கு இழப்பிற்கு 144 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அதிகப்பட்சமாக அஃபிஃப் ஹொசைன் 45 ஓட்டங்கள் எடுத்தார். இதனால் நியூசிலாந்து அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் சோதி 4 மட்டையிலக்குடுகளை கைப்பற்றினார்.

இதனால் மூன்று 20 ஓவர் கொண்ட போட்டி தொடரை நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »