Press "Enter" to skip to content

ஐபிஎல் 2021: கேப்டன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் விதிமுறை மாற்றியமைப்பு

சர்ச்சைக்குரிய வகையிலான சாஃப்ட் சிக்னல் முறை ஐபிஎல் தொடரில் நீக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐபிஎல் 2021 பருவம் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. மாலை 8 மணிக்கு போட்டி தொடங்கி சுமார் 11 அல்லது 11.30 மணியளவில் முடிவடையும்.

இந்த பருவத்தில் ஒரு அணி 90 நிமிடங்களிலும் பந்து வீசி முடிக்க வேண்டும். அப்படி முடிக்காவிடில் அந்த அணிக்கு அபராதம் விதிக்கப்படும். முதல்முறை தவறு செய்யும் அணியின் கேப்டனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அதே தவறை 2-வது முறையாக செய்தால் 24 லட்சம் ரூபாய் அபாரதம் விதிக்கப்படும். அந்த அணியில் உள்ள அனைவரும் 6 லட்சம் ரூபாய் அல்லது போட்டிக்கான கட்டணத்தில் 25 சதவீதம். இரண்டில் எது குறைவோ அது வசூலிக்கப்படும்.

3-வது முறையாக தவறு நடந்தால் கேப்டனுக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன், ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாட தடைவிதிக்கப்படும். அணியில் உள்ள வீரர்களுக்கு 12 லட்சம் அல்லது 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல் களத்தில் உள்ள நடுவர்கள் அவுட் கொடுக்கும்போது சாஃப்ட் சிக்னல் என தெரிவித்தால், அது செல்லாது. 3-வது நடுவர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முடிவுகளை மாற்றிக் கொள்ளலாம்.

அதேபோல் மட்டையாட்டம் அணி நேரத்தை வீணடிக்காமல் இருக்க வேண்டும். அதை 4-வது நடுவர் கண்காணிக்க வேண்டும் என பிசிசிஐ விதிமுறைகளை மாற்றியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »