Press "Enter" to skip to content

இந்த வருடம் தடையை தாண்டுவோம்: டெல்லி அணி ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டிய ரிஷப் பண்ட்

ஷ்ரேயாஸ் அய்யருக்கு காயம் ஏற்பட்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் 8 அணிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ஒன்று. இதுவரை சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை என்றாலும், இளம் வீரர்கள் அதிக அளவில் இடம்பிடித்துள்ள அணி. ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராகவும், ஷ்ரேயாஸ் அய்யரை கேப்டனாகவும் நியமித்த பின், அந்த அணி முன்னேற்றம் கண்டது.

அரையிறுதியை தாண்டியதில்லை என்ற பெயர் இருந்த நிலையில், கடந்த பருவத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோற்று சாம்பியன் வாய்ப்பை இழந்தது.

இந்த வருடமும் அதே உத்வேகத்துடன் விளையாட இருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது ஷ்ரேயாஸ் அய்யருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மற்றொரு இளம் வீரராக ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ரிஷப் பண்ட் கூறுகையில் ‘‘என் மீது நம்பிக்கை வைத்துள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ்க்கு நன்றி. ஒவ்வொரு நாளும் என்னுடைய 100 சதவீத திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். இந்த முறை நாம் தடையை தாண்டுவோம் என்ற நம்பிக்கையுள்ளது. டெல்லி ரசிகர்கள், தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

கடந்த சில வருடங்களாக டெல்லி அணியில் விளையாடி வரும் எனக்கு, கேப்டன் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன். ரிக்கி பாண்டிங், கோச்சிங் ஸ்டாஃப், நிர்வாகம், அணியின் சக வீரர்கள் மற்றும் என்மீது நம்பிக்கை வைத்துள்ள ரசிகர்களுக்க நன்றி’’ எனத் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »