Press "Enter" to skip to content

மிகப்பெரிய வீரர் ஓய்வு பெற்றாலும், இந்திய அணி தடுமாறாது: முகமது ஷமி

ஆஸ்திரேலியா தொடரில் நெட் பவுலர்கள் அபாரமாக பந்து வீசியது, மாற்றத்திற்கான வேலை சீராக நடைபெறும் என்பதை காட்டுகிறது என முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட சோதனை கிரிக்கெட் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றியது. விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரோகித் சர்மா, ஜடேஜா, அஷ்வின், உமேஷ் யாதவ் இல்லாமலேயே இளம் வீரர்கள் அசத்தினார்கள்.

டி. நடராஜன், வாஷிங்டன் சுந்தர் போன்றவர்கள் நெட் பவுலர்களான அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் சோதனை போட்டியில் அசத்தினார்கள்.

இதுகுறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘இளம் வீரர்கள் எங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். நாங்கள் ஓய்வு பெறும்போது இது நடக்கும். அதிகமாக விளையாடும்போது, சிறந்த திறனை பெறுவார்கள். நாங்கள் போட்டியை முடிக்கும்போது மாற்றம் சீராக நடைபெறும்.

ஒரு மிகப்பெரிய வீரர் ஓய்வு பெற்றாலும், இந்திய அணி தடுமாற்றம் அடையாது. வெளியில் இருக்கும் வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். அனுபவம் எப்போதும் தேவைப்படுகிறது. இளைஞர்கள் அதை சரியான நேரத்தில் பெறுவார்கள்.

பாதுகாப்பு வளையம் காரணமாக அதிகமான பந்து நெட் பவுலர்களை கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அது அவர்களுக்கு உதவியாக இருந்தது. அவர்களை வெளிப்படுத்தவும் உதவியது. ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலியா மண்ணில் வீழ்த்தியது மிகப்பெரிய சாதனை. சீனியர் பவுலர்கள் இல்லாமல் இதை நம்மால் செய்ய முடிந்தது என்றால், இளைஞர்களை பயன்படுத்த முடியும் என்பதை காட்டுகிறது’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »