Press "Enter" to skip to content

ஏலம் குறித்து கேட்க ஆர்சிபி-யிடம் ஏராளமான கேள்விகள் உள்ளன: பார்தீவ் பட்டேல்

ஒரு வீரரால் ஒட்டுமொத்த ஆடும் லெவன் கலவையை முற்றிலுமாக மாற்ற முடியும் என ஆர்சிபி முன்னாள் வீரர் பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி இரு அணிகளுக்காகவும் விளையாடியவர் பார்தீவ் பட்டேல். தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

வருகிற 9-ந்தேதி ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் ஏலத்தின்போது மொயீன் அலியை ஆர்சிபி அணி விடுவித்தது.

இந்த நிலையில் அவர் அணியில் இருந்திருந்தால் ஆர்சிபி முற்றிலும் மாறுப்பட்ட ஆடும் லெவன் அணியாக திகழ்ந்திருக்கும் என் பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பார்த்தீவ் பட்டேல் கூறுகையில் ‘‘ஐபிஎல் ஏலம் குறித்து ஏராளமான கேள்விகளுக்கு ஆர்சிபி பதில் அளிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால், கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் மொயீன் அலி அணியை விட்டுச் செல்வார் என்று நினைக்கவில்லை. ஆனால் சென்றுவிட்டார். மொயீன் அலி ஆர்சிபி அணியில் இருந்திருந்தால் முற்றிலும் மாறுபட்ட ஆடும் லெவன் அணியாக இருந்திருக்கும். ஒரு வீரரால் உண்மையிலேயே ஆடும் லெவன் அணி கலவையை மாற்ற முடியும்.

விராட் கோலி, ஏபிடி-ஐ தவிர்த்து அவர்கள் கவனம் செலுத்த விரும்புகிறார்கள். ஆனால், அதில் வெற்றி பெற அணிக்குள்ளேயே அவர்கள் எப்படி முயற்சி செய்கிறார்கள என்பது முக்கியமான விசயம்.

சென்னையில் விளையாடும்போது ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்த வரைக்கும் மிகப்பெரிய அளவில் மாற்றம் இருக்காது. ஹர்திக் பாண்ட்யா 4 சுற்றுகள் வீசுவார். பொல்லார்டு மிதவேகமாக ஆடுகளத்திற்கு ஏற்றவாறு பந்து வீசுவார்.

ராகுல் சாஹர் உள்ளார். குருணால் பாண்ட்யா உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசியுள்ளார். மேலும் இந்திய அணியில் இருவரும் இடம்பிடித்திருந்தனர்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »