Press "Enter" to skip to content

குர்கீரத் சிங் மான்-ஐ ஒப்பந்தம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த ரிங்கி சிங், காயம் காரணமாக இந்த பருவம் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார்.

குர்கீரத் மான் சிங்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தவர் ரிங்கு சிங். கடந்த 2017-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ளார். வருகிற 9-ந்தேதி தொடங்கும் 2021 பருவத்தில் விளையாட ஆர்வமாக இருந்தார்.

ரிங்கு சிங்

ஆனால் கால்மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த பருவத்தில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக 30 வயதான குர்கீரத் சிங் மான்-ஐ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் கடந்த பருவத்தில் ஆர்சிபி அணிக்காக விளையாடினார். அவரை ஆர்சிபி விடுவித்தது. மற்ற அணிகள் ஏலத்தில் எடுக்கவில்லை.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »