Press "Enter" to skip to content

மிடில் வாங்குதல் சொதப்பல்: சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு 188 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது கேகேஆர்

நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த, அந்த் ரஸல், மோர்கன் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 3-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் மட்டையாட்டம் செய்தது.

நிதிஷ் ராணா, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷுப்மான் கில் 15 ஓட்டத்தில் ஆட்டடமிழந்தார். அடுத்து நிதிஷ் ராணா உடன் ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சன்ரைசர்ஸ் ஐதாராபாத் பந்து வீச்சை துவம்சம் செய்தது.

அணியின் ஸ்கோர் 15.2 சுற்றில் 146 ரன்னாக இருக்கும்போது திரிபாதி 29 பந்தில் 53 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எளிதாக 200 ஓட்டத்தில்த் தாண்டுவது போல் இருந்தது.

ஆனால் அந்த்ரே ரஸலை (5) ரஷித் கானும், மோர்கன் (2) மற்றும் நிதிஷ் ராணாவை (80) முகமது ரபியும் வீழ்த்த கொல்கத்தாவின் ஓட்டத்தை வேகம் குறைந்தது. தினேஷ் கார்த்திக் 9 பந்தில் 22 ஓட்டங்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 சுற்றில் 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 187 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 188 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ரஷித் கான் 4 சுற்றில் 24 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 மட்டையிலக்குடும், முகமது நபி 4 சுற்றில் 32 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »