Press "Enter" to skip to content

ஐதராபாத்தை 10 ஓட்டத்தில் வீழ்த்தியது – கொல்கத்தா அணிக்கு 100-வது வெற்றி

சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை:

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 9-ந் தேதி தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 மட்டையிலக்கு வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது.

2-வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது.

3-வது லீக் ஆட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 மட்டையிலக்கு இழப்புக்கு 187 ஓட்டத்தை குவித்தது.

தொடக்க வீரர் நிதிஷ்ரானா 56 பந்தில் 80 ரன்னும் (9 பவுண்டரி, 4 சிக்சர்), ராகுல் திரிபாதி 29 பந்தில் 53 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), திணேஷ்கார்த்திக் 9 பந்தில் 22 ரன்னும் (2 பவுண்டரி , 1 சிக்சர்) எடுத்தனர். ரஷீத்கான்,முகமது தலா 2 மட்டையிலக்குடும், புவனேஷ்வர்குமார், தலா 1 மட்டையிலக்குடும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய ஐதராபாத் அணியால் 20 சுற்றில் 5 மட்டையிலக்கு இழப்புக்கு 177 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணி 10 ஓட்டத்தில் வெற்றி பெற்றது.

மனிஷ்பாண்டே அதிக பட்சமாக 44 பந்தில் 61 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), பேர்ஸ்டோவ் 40 பந்தில் 55 ரன்னும் ( 5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

கொல்கத்தா அணி தரப்பில் பிரதிஷ்கிருஷ்ணா 2 மட்டையிலக்குடும், சகீப்-அல்-ஹச ன், கும்மின்ஸ் , ஆந்த்ரே ரஸல் தலா 1 மட்டையிலக்குடும் எடுத்தனர்.

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் பெற்ற 100-வது வெற்றி இதுவாகும். 193 ஆட்டத்தில் விளையாடி அந்த அணி இந்த வெற்றியை பெற்று சாதித்தது.

நேரடியாக 99 வெற்றியையும், சூப்பர் சுற்றில் 1 வெற்றியையும் ஆக மொத்தம் 100 வெற்றிகளை பெற்றது. 93 ஆட்டத்தில் தோற்று இருந்தது.

ஐ.பி.எல். போட்டியில் 100-வது வெற்றியை பெற்ற 3-வது அணி என்ற சாதனையை கொல்கத்தா படைத்தது. மும்பை இந்தியன்ஸ் 118 ஆட்டங்களிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 106 போட்டிகளிலும் வெற்றி பெற்று முறையே முதல் 2 இடங்களில் உள்ளன.

100-வது வெற்றியை பெற்ற கொல்கத்தா அணிக்கு அதன் உரிமையாளரும், பிரபல பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவில் ‘‘ 100-வது வெற்றியை பெற்றது சிறப்பானது. இதற்காக வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தா அணி 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை சென்னையில் நாளை எதிர்கொள்கிறது.

ஐதராபாத் அணி 2-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 14-ந் தேதி சேப்பாக்கத்தில் சந்திக்கிறது.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »