Press "Enter" to skip to content

மார்ச் மாதத்துக்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருதுக்கு புவனேஷ்வர்குமார் தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.

துபாய்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதத்துக்கான (மார்ச்) சிறந்த வீரர் விருது பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், ஜிம்பாப்வே கேப்டன் சீன் வில்லியம்ஸ் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இதில் ரசிகர்கள் மற்றும் ஐ.சி.சி. வாக்கு அகாடமியின் அதிக ஆதரவை பெற்றதன் அடிப்படையில் புவனேஷ்வர்குமார் சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

31 வயதான புவனேஷ்வர்குமார் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 சுற்றிப் போட்டித் தொடரில் அசத்தியதன் மூலம் இந்த விருதுக்கு தேர்வாகி இருக்கிறார். இந்த விருதை தொடர்ச்சியாக பெறும் 3-வது இந்திய வீரர் புவனேஷ்வர்குமார் ஆவார். ஏற்கனவே ஜனவரி மாதத்தில் ரிஷாப் பண்டும், பிப்ரவரி மாதத்தில் ஆர்.அஸ்வினும் இந்த கவுரவத்தை பெற்றனர். இதே போல் சிறந்த வீராங்கனை பட்டியலில் இடம் பெற்று இருந்த தென்ஆப்பிரிக்க வீராங்கனை லிசல் லீ, இந்திய வீராங்கனைகள் ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் ரவுத் ஆகியோரில் இருந்து லிசல் லீ் விருதை தட்டிச்சென்றார்.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »