Press "Enter" to skip to content

பஞ்சாபின் அசுர மட்டையாட்டம்கை கட்டுப்படுத்துமா சிஎஸ்கே-வின் பந்து வீச்சு?- நாளை மும்பையில் பலப்பரீட்சை

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிஎஸ்கே-யின் பந்து வீச்சு சுத்தமாக எடுபடாத நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கூடுதல் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே 2-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் 24 முறை நேருக்குநேர் மோதியதில் சிஎஸ்கே 15 முறை வென்று அதிக்கம் செலுத்தியுள்ளது.

கடந்த பருவத்தில் பிளேஆஃப் சுற்றோடு வெளியேறியதால், இந்த முறை சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தோடு டெல்லிக்கு எதிராக முதல் போட்டியில் களம் இறங்கியது. சிஎஸ்கே அணியின் ஆடும் லெவன் அணியை பார்க்கும்போது, 11 பேரும் மட்டையாட்டம் திறமை பெற்றவர்களாக இருந்தனர். இதனால் இந்த முறை பட்டைய கிளப்பும் என ரசிகர்கள் ஆனந்தத்தில் இருந்தனர்.

ஆனால் தொடக்க ஆட்டத்தில் ஓபனின் போனியாகவில்லை. டு பிளிஸ்சிஸ் ஓட்டத்தை கணக்கை தொடக்காமலும், கடந்த பருவத்தில் கடைசி மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்த ருத்து ராஜ் 5 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

ஓபனிங் சொதப்பினால் என்ன? 7 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட நான் ஜோடை போகமாட்டேன் என்பதுபோல் மொயீன் அலி 24 பந்தில் 36 ஓட்டங்கள் விளாசினார்.

‘குட்டி தல’ ரெய்னா அரைசதம் அடித்து ஓட்டத்தை ஸ்கோரை உயர்த்த, சுட்டிப் பையன் சாம் கர்ரன் 15 பந்தில் 34 ஓட்டத்தை விளாசி சிஎஸ்கே 188 ஓட்டங்கள் எட்ட உதவினார். இதனால் டோனியின் டக் அவுட் பெரிதாக தெரியவில்லை.

ஆனால் மட்டையாட்டம்கிற்கு சாதகமான வான்கடேயில் பிரித்வி ஷா, ஷிகர் தவன் சென்னை பந்து வீச்சை பஞ்சாக பறக்க விட்டனர்.

தீபக் சாஹர், கர்ரன், ஷர்துல் தாகூர், ஜடேஜா, மொயீன் அலி, பிராவோ என ஆறு பேர் பந்து வீசியும் பலனில்லை. பந்து வீச்சில் வாரி வழங்கும் வள்ளலாக திகழ்ந்தனர். சிஎஸ்கே-வின் தடுமாற்றத்திற்கு குயிக் பவுன்சர், அதிவேகமாக பந்து வீசக்கூடிய பவுலர்கள் இல்லாததே காரணம் என்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.

சிஎஸ்கே அணியில் லுங்கி நிகிடி, பெரேண்டர்ஃப் உள்ளனர். இருவரும் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடமாட்டார்கள் என சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளார்.

இதனால் சிஎஸ்கே இதே பந்து வீச்சு யுனிட் உடன்தான் களம் இறங்கும். ஒருவேளை டாஸ் தோற்று, 2-வதாக பந்து வீசும் நிலை ஏற்பட்டால், முதல் போட்டியில் திணறியது போன்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் பந்தில் வேகத்தை கூட்டுவது அவசியம்.

போட்டி முடிந்தபின் எம்எஸ் டோனி, ஆட்டம் 7.30 மணிக்கு தொடங்குவதால் பனிப்பொழிவின்போது முதலில் மட்டையாட்டம் செய்யும் அணிக்கு முதல் அரைமணி நேரம் மிகமிக முக்கியமானது என்றார். அந்த நேரத்தில் 8 சுற்றில்களில் 60 ரன்களுக்கு மேல் அடித்தால், எளிதாக 200 ஓட்டங்கள் குவித்து விடலாம். இதுதான் முதலில் மட்டையாட்டம் செய்யும் அணிக்கு மந்திரமாக இருக்கும்.

பஞ்சாப் என்றாலே, ரசிகர்களின் நினைவுக்கு வருவது அதிரடிதான். அதற்கு காரணம் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெயல், நிக்கோலஸ் பூரன் ஆகியோர்தான். தற்போது இவர்களுடன் தீபக் ஹூடா இணைந்துள்ளார்.

தீபக் ஹூடா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் 28 பந்தில் 64 ஓட்டங்கள் குவித்தார். இதில் 6 சிக்சர்கள் அடங்கும். சில சிக்சர்கள் ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் ஷாட்களை கண் முன் கொண்டு வந்தது. இதனால் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

கேஎல் ராகுல் (91), கிறிஸ் கெய்ல் (40) ஆகியோரின் அதிரடி வழக்கம்போல் தொடர்கிறது. முதல் போட்டியிலேயே 200 ரன்களை கடந்து பிரமிக்க வைத்துள்ளது. சென்னை அணியின் பந்து வீச்சு இவர்களை கட்டுப்படுத்துமா? என்பதே கேள்வி.

பஞ்சாப் அணியின் பந்து வீச்சில் குறை உள்ளதை மறுக்க இயலாது. அந்த அணி ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவது மிகப்பெரிய பலவீனம். ராஜஸ்தானுக்கு எதிராக 222 இலக்கில் 217 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தது.

ஒரு சுழற்பந்து வீச்சாளர், நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுகிறார்கள். ஒரு பவுலரை இலக்கு செய்தால் கூட 4 சுற்றில் 50 ஓட்டங்கள் வரை அடித்து விடலாம். இதை பஞ்சாப் சரி செய்து கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் பஞ்சாப் மட்டையாட்டம்கை சிஎஸ்கே பந்து வீச்சு எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதை பொறுத்துதான் போட்டியில் வெற்றித் தோல்வி அமையும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »