Press "Enter" to skip to content

மட்டையிலக்குடுகளை இழந்ததால் வெற்றி பெறுவது கடினம் என்று நினைத்தேன் – சஞ்சு சாம்சன்

தொடக்கத்தில் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரி‌ஷப் பண்ட் கூறியுள்ளார்.

மும்பை:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பையில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் மட்டையாட்டம் செய்த டெல்லி 20 சுற்றில் 8 மட்டையிலக்கு இழப்புக்கு 147 ஓட்டத்தை எடுத்தது. கேப்டன் ரி‌ஷப்பண்ட் 51 ஓட்டத்தை எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் ஜெய்தேவ் உனத்கட் 3 மட்டையிலக்குடும், முஸ்தபா பிஜூர் ரகுமான் 2 மட்டையிலக்குடும் கைப்பற்றினர்.

இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் 42 ரன்னுக்கு 5 மட்டையிலக்குடை இழந்து தத்தளித்தது. பின்னர் டேவிட் மில்லர் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். அவர் 43 பந்தில் 62 ஓட்டத்தை எடுத்து அவுட் ஆனார்.

கடைசியாக கிறிஸ் மோரிஸ் அதிரடியாக ஆடினார். கடைசி சுற்றில் வெற்றிக்கு 12 ஓட்டத்தை தேவைப்பட்ட நிலையில் கிறிஸ் மோரிஸ் இரண்டு சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார்.

ராஜஸ்தான் 19.4 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்புக்கு 150 ஓட்டத்தை எடுத்தது. வெற்றி குறித்து ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

40 ரன்னுக்கு 5 மட்டையிலக்குடை இழந்ததால் வெற்றி பெறுவதே கடினமானது என்று நினைத்தேன். எங்களிடம் மில்லர் மற்றும் மோரிஸ் இருந்தனர். ஆனாலும் கடினமானது என்றே நினைத்தேன். அது சூழ்நிலைகளை பொறுத்தது.

வேகத்தை எடுத்துக்கொள்வது எங்கள் வேகப்பந்து வீச்சாளர்களின் வலிமையாகும். கிறிஸ் மோரிஸ், தயவு செய்து ஒரு சிக்சரை அடிக்க முடியுமா? என்று நான் மனதுக்குள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லி கேப்டன் ரி‌ஷப் பண்ட் கூறியதாவது:-

தொடக்கத்தில் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இறுதி கட்டத்தில் அவர்கள் (ராஜஸ்தான்) எங்களை மீறி செல்ல அனுமதித்து விட்டோம்.

நாங்கள் சிறப்பாக பந்து வீசியிருக்க முடியும். பனி எங்களுக்கு சாதகமாக இருந்தது. நாங்கள் 15 முதல் 20 ஓட்டங்கள் குறைவாக எடுத்துவிட்டோம் என நினைக்கிறேன்.

ஆனால் இந்த போட்டியில் இருந்து நல்ல வி‌ஷயங்களை எடுத்து கொள்ளலாம். எதிர்காலத்தில் அதை செயல்படுத்த முடியும் என்று நம்புகிறோம் என்றார்.

ராஜஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோற்றது. டெல்லி அணி முதல் தோல்வியை (2 ஆட்டம்) சந்தித்தது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »