Press "Enter" to skip to content

ஐபிஎல் 2021 – ராஜஸ்தானை 45 ஓட்டங்களில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி

பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி அசத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

மும்பை:

ஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ருத்துராஜ் 10 ஓட்டத்தில் வெளியேறினார். டு பிளிஸ்சிஸ் 33 ரன்னிலும், மொயீன் அலி 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

தொடர்ந்து ரெய்னா (18), அம்பதி ராயுடு (27), டோனி (18), சாம் கர்ரன் (13), பிராவோ (20 நாட்அவுட்) ஓரளவிற்கு ஓட்டங்கள் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 சுற்றில் 9 மட்டையிலக்குடுக்கு 188 ஓட்டங்கள் குவித்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் சேத்தன் சகாரியா 3 மட்டையிலக்குடும், கிறிஸ் மோரிஸ் 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது.

ஆனால் சென்னை அணியினர் நேர்த்தியாக பந்து வீசி அசத்தினர். அதனால் சீரான இடைவெளியில் ராஜஸ்தான் அணியின் மட்டையிலக்குடுகள் விழுந்தது.

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் மட்டும் பொறுப்புடன் ஆடி 49 ஓட்டங்களில் அவுட்டானார். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை.

கடைசி கட்டத்தில் ராகுல் டெவாட்டியாவும், ஜெய்தேவ் உனத்கட்டும் போராடினர். இருவரும் இணைந்து 42 ஓட்டங்கள் சேர்த்தனர். டெவாட்டியா 20 ஓட்டத்தில் அவுட்டானார். உனத்கட் 24 ஓட்டத்தில் வெளியேறினார்.

இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 143 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது சென்னை அணியின் 2வது வெற்றி ஆகும்.

சென்னை அணி சார்பில் மொயீன் அலி 3 மட்டையிலக்குடும், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா தலா 2 மட்டையிலக்குடும், ஷர்துல் தாக்குர், பிராவோ தலா ஒரு மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »