Press "Enter" to skip to content

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 138 ரன்களே இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் 8.4 சுற்றில் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 76 ஓட்டங்கள் எடுத்திருந்த போதிலும், மிஷ்ரா மட்டையிலக்குடுகளை சாய்க்க இறுதியில் 137 ரன்களே அடித்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் மட்டையாட்டம் தேர்வு செய்தது.

டி காக் 1 ஓட்டத்தில் வெளியேற 2-வது மட்டையிலக்குடுக்கு ரோகித் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர் 6.6 சுற்றில் 67 ரன்காக இருக்கும்போது சூர்யகுமார் யாதவ் 15 பந்தில் 24 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய ரோகித் சர்மா 30 பந்தில் 44 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அமித் மிஷ்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 8.4 சுற்றில் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 76 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அதன்பின் மும்பை இந்தியன்ஸ் ஸ்கோரில் மந்தநிலை ஏற்பட்டது. ஹர்திக் பாண்ட்யா (0), பொல்லார்டு (2) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார் அமித் மிஷ்ரா. அத்துடன் இஷான் கிஷனை (26 ரன்) 7-வது மட்டையிலக்குடாக வீழ்த்தினார்.

இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 20 சுற்றில் 9 மட்டையிலக்கு இழப்பிற்கு 137 ஓட்டங்கள் அடித்துள்ளது. டெல்லி அணி சார்பில் அமித் மிஷ்ரா 4 சுற்றில் 24 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 மட்டையிலக்கு சாய்த்தார். அவேஷ் கான் 2 மட்டையிலக்கு வீழ்த்தினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »