Press "Enter" to skip to content

படிக்கல், கோலி அபாரம் – ராஜஸ்தானை 10 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூர்

தேவ்தத் படிக்கல் சதமடித்து அசத்த, விராட் கோலி அரை சதத்துடன் அவருக்கு ஒத்துழைக்க பெங்களுரணி 10 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பை:

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பட்லர், மனன் வோரா ஆகியோர் களமிறங்கினர்.

பட்லர் 8 ரன்னும், மனன் வோரா 7 ரன்னும், டேவிட் மில்லர் ஓட்டத்தை எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 21 ஓட்டத்தில் அவுட்டானார்.

சிவம் துபே 46 ஓட்டத்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்து ஆடிய ரியான் பராக் 25 ஓட்டங்கள் எடுத்தார்.

கடைசி கட்டத்தில் ஜோடி சேர்ந்த ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ் அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய ராகுல் டெவாட்டியா 40 ஓட்டங்கள் குவித்தார்.

இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 மட்டையிலக்குடை பறிகொடுத்து 177 ஓட்டங்கள் எடுத்தது.

பெங்களூர் சார்பில் சிராஜ், ஹர்ஷல் படேல் தலா 3 மட்டையிலக்கு வீழ்த்தினர்.

இதையடுத்து, பெங்களூர் அணி 178 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, தேவ்தத் படிக்கல் இறங்கினர். தொடக்கம் முதலே தேவ்தத் படிக்கல் அதிரடியாக விளாசினார். அவருக்கு கோலி பக்கபலமாக இருந்தார். இதனால் அணியின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்தது.  

ராஜஸ்தான் அணியினரின் பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை.

படிக்கல் 51 பந்தில் சதமடித்து அசத்தினார். விராட் கோலி அரை சதமடித்தார். அவர் 101 ரன்னுடனும், கோலி 72 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இறுதியில், பெங்களூர் அணி மட்டையிலக்கு இழப்பின்றி வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »