Press "Enter" to skip to content

சஞ்சு சாம்சன், கிறிஸ் மோரிஸ் அபாரம் – கொல்கத்தாவை வீழ்த்தியது ராஜஸ்தான்

பந்து வீச்சில் கிறிஸ் மோரிஸ் 4 மட்டையிலக்குவீழ்த்த, சஞ்சு சாம்சன் நிதானமாக ஆட கொல்கத்தாவை 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி.

மும்பை:

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேட்பன் சஞ்சு சாம்சங் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக நிதிஷ் ரானா மற்றும் சுக்மன் கில் களமிறங்கினர்.  கில் 11 ரன்னிலும், ரானா 22 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த சுனில் நரைன் 6 ரன்னிலும், கேப்டன் மோர்கன் (0) ஓட்டத்தை எதுவும் எடுக்காமலும் வெளியேறினர்.

ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய திரிபாதி 36 ஓட்டங்களில் வெளியேறினார். தினேஷ் கார்த்திக் 25 ஓட்டத்தில் வெளியேறினார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 சுற்றுகள் முடிவில் 9 மட்டையிலக்குடுக்கு 133 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

ராஜஸ்தான் சார்பில் கிறிஸ் மோரிஸ் 4 மட்டையிலக்குடுகளை கைப்பற்றி அசத்தினார்.

134 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஆடினர்.

பட்லர் 5 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 22 ரன்னிலும், ஷிவன் துபே 22 ரன்னிலும், டெவாட்டியா 5 ரன்னிலும் அவுட்டாகினர்.

ஒருபுறம் மட்டையிலக்குடுகள் வீழ்ந்தாலும் கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்புடன் விளையாடினார். அவருக்கு மில்லர் ஒத்துழைப்பு கொடுத்தார்.

இறுதியில், ராஜஸ்தான் அணி 18.5 சுற்றில் 4 மட்டையிலக்கு இழப்புக்கு 134 ஓட்டங்கள் எடுத்து, 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாம்சன் 42 ரன்னும், மில்லர் 24 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இது ராஜஸ்தான் பெற்ற இரண்டாவது வெற்றியாகும். கொல்கத்தா அணி பெற்ற 4வது தோல்வி இதுவாகும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »