Press "Enter" to skip to content

ஒரே சுற்றில் 37 ஓட்டங்கள்: ஜடேஜா அதிரடியால் அதிக ஓட்டத்தை சாதனையை சமன் செய்தது சிஎஸ்கே

ஒரே சுற்றில் 37 ஓட்டங்கள் அடித்த அணி என்ற பெருமையை சிஎஸ்கே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக பெற்றுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 19-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை அணி முதலில் மட்டையாட்டம் செய்தது.

19 ஓவர் முடிவில் சிஎஸ்கே 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 154 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 20-வது ஓவரை ஹர்சல் பட்டேல் வீசினார். ஜடேஜா இந்த ஓவரை எதிர்கொண்டார். முதல் இரண்டு பந்துகளையும் ஜடேஜா சிக்சருக்கு விளாசினார். 3-வது பந்தை ஹர்சல் பட்டேல் புல்டாஸாக இடுப்பிற்கு மேல் வீசினார். இந்த பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். அது நோ-பால் என அறிவிக்கப்பட்டது.

நோ-பாலுக்கு பதிலாக வீசிய பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இதனால் தொடர்ந்து நான்கு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் 2 ஓட்டத்தை எடுத்த ஜடேஜா, கடைசி பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இதன் மூலம் ஒரே சுற்றில் 36 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் கிறிஸ் கெய்ல் ஓரே சுற்றில் 36 ஓட்டங்கள் அடித்ததை சமன் செய்தார்.

கிறிஸ் கெய்ல் அதிரடியால் ஆர்சிபி ஒரே சுற்றில் 37 ஓட்டங்கள் எடுத்து, ஒரே சுற்றில் அதிக ஓட்டங்கள் அடித்த அணி என்ற பெருமையைப் பெற்றிருந்தது. தற்போது இந்த போட்டி மூலம் ஜடேஜா அதிரடியால் சிஎஸ்கே ஒரே சுற்றில் 37 ஓட்டங்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »