Press "Enter" to skip to content

மணிஷ் பாண்டே, வார்னர் அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 172 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஐதராபாத்

மணிஷ் பாண்டே, டேவிட் வார்னர் அரைசதம் அடிக்க லுங்கி நிகிடி 2 மட்டையிலக்கு வீழ்த்த, சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 172 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.

சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் மட்டையாட்டம் தேர்வு செய்தது.

அந்த அணியின் டேவிட் வார்னர், பேர்ஸ்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பேர்ஸ்டோவ் 7 ஓட்டத்தை எடுத்த நிலையில் சாம் கர்ரன் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து டேவிட் வார்னர் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. வார்னர் வழக்கத்திற்கு மாறாக நிதானமாக விளையாடினார். மணிஷ் பாண்டே ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர். இதன்காரணமாக மணிஷ் பாண்டே 35 பந்திலும், வார்னர் 50 பந்திலும் அரைசதம் அடித்தனர்.

டேவிட் வார்னர் 55 பந்தில் 57 ரன்களும், மணிஷ் பாண்டே 46 பந்தில் 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 4-வது வீரராக களம்இறங்கிய கேன் வில்லியம்சன் ஷர்துல் தாகூர் வீசிய 19-வது சுற்றில் தொடர்ந்து 4,6,4,4 என விரட்டினர். இதனால் சிஎஸ்கே அந்த சுற்றில் 20 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தது. இதனால் ஐதராபாத் 150 ரன்களை தாண்டியது.

கடைசி ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த சுற்றில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 சுற்றில் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 171 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

கேன் வில்லியம்சன் 10 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 26 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேதர் ஜாதவ் 4 பந்தில் 12 ஓட்டங்கள் எடுத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லுங்கி நிகிடி 2 மட்டையிலக்குடும், சாம் கர்ரன் 1 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »