Press "Enter" to skip to content

மும்பை இந்தியன்ஸ்க்கு 172 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்

பட்லர் 41 ரன்களும், ஜெய்ஸ்வால் 32 ரன்களும், சாம்சன் 42 ரன்களும், ஷிவம் டுபே 35 ரன்களும் அடிக்க மும்பை அணிக்கு 172 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

சஞ்சு சாம்சன்

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பட்லர், ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பட்லர் 32 பந்தில் 41 ரன்களும், ஜெய்ஸ்வால் 20 பந்தில் 32 ரன்களும் விளாசி நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

மும்பை வீரர்கள்

ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்கும்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 9.5 சுற்றில் 91 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அதன்பின் ஓட்டத்தை வேகத்தில் மந்த நிலை ஏற்பட்டது. சஞ்சு சாம்சன் 27 பந்தில் 42 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். ஷிவம் டுபே 31 பந்தில் 35 ரன்களே அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 சுற்றில் 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 171 ரன்களே அடித்தது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »