Press "Enter" to skip to content

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: முதல் மூன்று இடங்களுக்கு கடும் போட்டி- 4-வது இடத்தில் மும்பை

கொல்கத்தா நைட் ரைடரஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் எளிதாக வெற்றி பெற்றதுடன், புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 171 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் மும்பை இந்தியன்ஸ் 18.3 சுற்றில் இலக்கை எட்டி 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 சுற்றில் 154 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய டெல்லி 16.3 சுற்றில் இலக்கை எட்டி 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் இந்த வெற்றியின் மூலம் 6 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் 7 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி 5 வெற்றிகள் பெற்றிருந்தாலும் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வெற்றிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஐபிஎல் அணிகளின் புள்ளிகள் பட்டியல் முழு விவரம்:

வ.எ. அணிகள் போட்டிகள் வெற்றிகள் புள்ளிகள் நெ.ர.ரேட்
1 சி.எஸ்.கே. 6 5 10 1.475
2 டெல்லி 7 5 10 0.466
3 ஆர்.சி.பி. 6 5 10 0.089
4 மும்பை 6 3 6 0.071
5 கே.கே.ஆர் 7 2 4 -0.494
6 பஞ்சாப் 6 2 4 -0.608
7 ஆர்.ஆர். 6 2 4 -0.690
8 ஐதராபாத் 6 1 2 -0.264

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »